Posts

ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள்.

 ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள். #துருக்கியர்கள் அதாவது #உதுமானியப் பேரரசுகளின் சமயத்தில் ரமலானை வரவேற்கவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் சில அனுஷ்டிப்புகளை அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில்  1) #நகாரா அடித்தல் : - ரமலான் நோன்பிருக்கவிருக்கும் நபர்களை அதிகாலை 3 மணியளவில் எழுப்பி விடுவதற்கு நன்கு ராஜ உடை தரித்த ஒருவரை நியமித்து மக்களை உரிய நேரத்தில் விழிப்படைச் செய்ய  கொட்டுப்பறை அடிப்பார்கள். அவ்வாறு அடிக்கும் போது இஸ்லாமிய ஒழுக்கங்களை கற்பிக்கும் விதமான பாடல்களையும் அவர்கள் பாடிக்கொண்டு வருவார்கள் (இந்தியா உட்பட அனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்த நகாரா அடிக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. உதுமானிய பேரரசின் தாக்கம் என்பதாக இதனை அறியலாம். தமிழகத்தில் நோன்பு திறப்பதற்கும் நகாரா அடிப்பார்கள்.) 2) #பிள்ளை நோன்பு : - குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களை நோன்பு வைக்க ஆர்வமூட்டுவதற்காக பசி பொறுக்காத பிள்ளைகளை ரகசியமாக அழைத்து நண்பகல் நேரத்திலேயே உணவை கொடுத்து உண்ணச்செய்துவிட்டு, என் குழந்தை நோன்பு பிடித்தது என்பார்களாம். ரகசியமாக தனக்கு தரப்பட்ட உணவை உண்ணாமல் முழு ஈமானுடன் நோன்பு வைத்த பிள
 பாரம்பரியம் பெற்ற #இஃப்தார் உணவுகள் #சமோசா  கிபி 10-13ஆம் நூற்றாண்டுகளில் அப்பாஸிய கிலாஃபத்தில் பக்தாத் தலைநகராக இருந்தபோது அங்கு அரசர்களுக்காக  தயாரிக்கப்பட்டது தான் சம்புசக்/சமுசா/சினாரா என நாம் தற்போது உண்ணும் சமோசா. பொறித்த வெங்காயம், இறைச்சி மற்றும் பட்டாணிகளை வைத்து முதலில் தயாரிக்கப்பட்ட சமொசாக்களை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என கிபி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிமத்நாமா ஹி நஸ்ருத்தீன் ஷாஹி என்ற பெர்சிய உணவுப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அதுபோல கீர் எனும் பாயாசமும் தயாரிக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியம் மாத்திரமல்லாது மற்ற கண்டங்களிலும் சமோசா மிகப்பிரபலமாக உள்ளது. சமோசாவில் உருளைக்கிழங்கை திணிச்ச கொடுமையை செஞ்சவன் வடக்கன் என அறிக. உ.கிழங்கு விட்டால் அவங்களுக்கு வேற உணவே கிடையாது. #ஸூல்பியா  அதாவது நம்ம நாட்டு ஜிலேபி தான் இரான் நாட்டில் உருவான ஸூல்பியா. பெர்சிய நாட்டில் ஆரம்பத்தில் அரிசி மாவிலும் பிறகு கடலை மாவிலும் தயாரிக்கப்பட்ட ஜிலேபி உண்ணப்படாத நாடுகளே இல்லை. நாம் நினைப்பது போல இது மார்வாடி இனிப்பு அல்ல மாறாக இதே முறையிலான தேங்