பாரம்பரியம் பெற்ற #இஃப்தார் உணவுகள்


#சமோசா 


கிபி 10-13ஆம் நூற்றாண்டுகளில் அப்பாஸிய கிலாஃபத்தில் பக்தாத் தலைநகராக இருந்தபோது அங்கு அரசர்களுக்காக  தயாரிக்கப்பட்டது தான் சம்புசக்/சமுசா/சினாரா என நாம் தற்போது உண்ணும் சமோசா. பொறித்த வெங்காயம், இறைச்சி மற்றும் பட்டாணிகளை வைத்து முதலில் தயாரிக்கப்பட்ட சமொசாக்களை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என கிபி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிமத்நாமா ஹி நஸ்ருத்தீன் ஷாஹி என்ற பெர்சிய உணவுப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அதுபோல கீர் எனும் பாயாசமும் தயாரிக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியம் மாத்திரமல்லாது மற்ற கண்டங்களிலும் சமோசா மிகப்பிரபலமாக உள்ளது. சமோசாவில் உருளைக்கிழங்கை திணிச்ச கொடுமையை செஞ்சவன் வடக்கன் என அறிக. உ.கிழங்கு விட்டால் அவங்களுக்கு வேற உணவே கிடையாது.


#ஸூல்பியா 


அதாவது நம்ம நாட்டு ஜிலேபி தான் இரான் நாட்டில் உருவான ஸூல்பியா. பெர்சிய நாட்டில் ஆரம்பத்தில் அரிசி மாவிலும் பிறகு கடலை மாவிலும் தயாரிக்கப்பட்ட ஜிலேபி உண்ணப்படாத நாடுகளே இல்லை. நாம் நினைப்பது போல இது மார்வாடி இனிப்பு அல்ல மாறாக இதே முறையிலான தேங்குழல் முறுக்கு நமது பண்டைய தமிழகத்திலும் தயாரிக்கப்பட்டு உண்ணப்பட்டுள்ளது. நம்மவர்கள் உளுந்தம்பயறு ஊற வைத்து அதனை ஆட்டியெடுத்து எண்ணெய்யில் பொறித்து பின் சீனிப்பாகில் ஊற வைத்துக் கொடுப்பார்கள். நாம் ஜிலேபி என கூறுவதை வடநாட்டில் ஜலோபி/ஜலேபி/ஜாங்கிரி என கூறுவார்கள் ஆனா  நாங்க சிலேப்பின்னு தான் சொல்றது.


#நிசல்தா 


தஜிகிஸ்தான் நாட்டின் பாரம்பரிய இனிப்பு என்றால் அது நிசால்தா தானாம், நமக்கு ரவா கேசரி மாதிரி. முட்டையின் வெள்ளைக்கரு, சீனி, எலுமிச்சை சாறுடன் அந்த நாட்டில் விளையும் ஒருவகை வேர்க்கிழங்கான நிசால்தா கிழங்கினை மாவாக்கி / பொடியாக்கி அதில் கலந்து கெட்டியான ஒரு ஐஸ்க்ரீம் பதத்திற்கு தயாராக்கி டப்பாக்கிளில் அடைத்து தற்போது விற்கின்றனர். நம்ம நாட்டில் அல்வா விற்கப்படுவதை போல, அரபு நாடுகளில் இதை நோம்பு நேர உணவாக வாங்கிக்கொள்கின்றனர்.


#கதாயஃப் 


எகிப்தில் பிரபலமான ஒரு இனிப்பு பண்டம் இது. நம்ம ஊரில் மடக்குப்பூரி மாதிரி தான். நாம கோதுமை மாவினை திரட்டி அதனுள் தேங்காப்பூ,கசகசா,சீனி இதல்லாம் வைத்து மடக்கு எண்ணெயில் பொறிப்பது போல இவங்களும் மாவை திரட்டி அதனுள் சீஸ், க்ரீம், நட்ஸ் இதல்லாம் வைத்து பொறித்துவிட்டு  கூடுதலாக சீனிப்பாகினுள் ஊறவைத்து அதன் மீது பிஸ்தா பொடி தூவி உண்கின்றனர். நம்ம ஊர் மடக்குப்பூரிக்கு இவங்க தான் முன்னோடி.


#ஹலீம் 


இந்தியத் துணைக்கண்டத்தில் கிபி.10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்த ஹலீம். தமிழகத்தின் நோன்புக்கஞ்சிக்கு மாற்றாக வடக்கர்கள் உருவாக்கியது இந்த உணவு. கோதுமையுடன் ,பார்லியும் , பருப்பில் மேலும் இரண்டு-மூன்று வகையும், இறைச்சியில் மேலும் இரண்டு-மூன்று வகையுடன் சில காய்கறிகள், உலர் பழங்கள் சேர்த்து மிக மிக மிதமான தீயில் உள்ளிட்டது அனைத்தும் மையாக கரைந்து கூழ் போல ஆகும் வரை தாமதமாக தயாரித்து வருவது ஹலீம். சில ஆண்டுகளாக பாகிஸ்தான், ஆப்கான் நாடுகளில் ஹலீம் என்ற பெயரை உபயோகிப்பதை தவிர்த்து அதனை கிச்ரா (கிச்சடி) என கூறி வருகின்றனர்.ஹலீம் என்பது இறைவனுடைய பெயரை குறிப்பதாக இருக்கிறதாம்.


#பிடேசி 


துருக்கியில் பிடா ரொட்டி மிகவும் சகஜமானது. நமக்கு தோசை,இட்டிலி மாதிரி அவங்க தினசரி உணவு பிடா ரொட்டி, அதையே ரமலான் காலங்களில் கொஞ்சம் கூடுதல் சுவையில் தயாரிக்கின்றனர். நோம்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் இரு வேளைக்கும் இந்த பிடா ரோட்டி அவர்களுக்கு தேவைப்படுகிறது. நம் பேக்கரிகளில் விற்கப்படுவது போல காய்ந்துபோய் அல்லாமல் அவர்களது ரொட்டி எப்போதும் நல்ல பஞ்சுபோல இருக்கிறதாம். தமிழ் மொழியில் எல்லாவற்றுக்கும் ஒற்று எழுத்துடன் முடிவுபெறுவது போல துருக்கியில் சி என்ற எழுத்துடன் முற்றுப்பெறுவது இயல்பு. நாம் ஹல்வா என்பதைக்கூட அவர்கள் ஹல்வேசி என கூறுவர்.


#சோர்பா  ஃப்ரிக்


அல்ஜீரியா நாட்டின் ரமலான் சிறப்பு உணவு இந்த சோர்பா கஞ்சி. நம்ம அரிசியில் காய்ச்சப்படும் நோம்புக்கஞ்சி மாதிரி தான். இதில் அரசிக்கு பதிலான அந்நாட்டில் விளையும் கோதுமையைப் போன்றதொரு தானியம் ஃப்ரிக் எனப்படுகிறது. பச்சையாக இருக்கும் போதே இந்த தானியத்தை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து லேசாக வறுத்துவிடுகின்றனர். அப்போது அதன் உமி தனியாக பிரிந்து வந்துவிடுகிறது. அந்த தானியத்தில் இறைச்சியும், வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,உப்பு ஆகியவற்றுடன் ஊற வைத்த வெண்கொண்டைக்கடலையும் சேர்த்து வேக வைத்து கஞ்சியாக தயாரித்துக் குடிப்பது ரமலானில் மட்டுமே அவர்களது பழக்கமாக உள்ளது. ஆனால் அல்ஜீரியாவை அடுத்துள்ள நாடுகளில் கொஞ்சம் இது பரவலாக உள்ளதே தவிர மற்ற நாடுகளில் பெரியதாக பரவவில்லை.


நம்மளுக்கு நம்ம அதிரசமும் ,பாச்சோறும்,

பச்சைப்பயறு பாயாசமும் ,

சக்கரக்கொழக்கட்டையும், சுவியமும் , அரிசி முறுக்கும்,  சீடையும் தான்  ஃபேவரைட்.

Comments

Popular posts from this blog

ரமலானை வரவேற்கும் உதுமானியப் பழக்கங்கள்.